விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் -  part-1

Ø         இயக்கம் - காலத்தை பொருத்து ஒரு பொருளின் நிலை மாறும்.

Ø        ஓய்வுநிலை - அப்பொருள் ஒரே இடத்தில் இருக்கும்..

Ø   இயக்கம் மற்றும்  ஓய்வுநிலை - அதனை காண்பவரது நிலையை பொறுத்து மாறுபடும். எனவே, இயக்கம் அல்லது ஓய்வுநிலை ஆகிய இரண்டும் சார்ப்புடையவை.

Ø    இந்தியாவின் பழங்கால வானியலாளர்- ஆரிய பட்டா. படகில் நாம் பயணிக்கும் போது ஆற்றகரையில் உள்ள மரங்கள் எதிர்திசையில் செல்லும். நட்சத்திரங்களை நாம் காணும்போது அவை கிழக்கிலிருந்து மேற்காகச் செல்வதாகத் தோன்றுவதால், நிச்சயம் நமது பூமியானது மேற்கிலிருந்து கிழக்காகத்தான் சுற்ற வேண்டும்

Ø       விசை - பொருள்களின் மீது தள்ளுதல் அல்லது இழுத்தல் செயல்.

Ø   உயிருள்ள காரணி - மனிதன் அல்லது விலங்குகளால் ஒரு பொருள் நிலை மாறுவது.

Ø     உயிரற்ற காரணிகள் - காற்று நீர் மூலமாக ஒரு பொருள் நிலை மாறுவது

Ø      தொடு விசை - ஒரு பொருள் தொடுவதன் மூலம் ஏற்படும் விசை.

Ø  தொடா விசை- ஒரு பொருளை தொடாமல் நகர்த்துவது  (.கா) - புவியீர்ப்பு விசை மற்றும் காந்தபுல விசை

Ø   ஒரு பொருளின் மீது விசை செயல்படுத்தும் போது பொருளின் வேகம் மற்றும் திசை மாறும் (.கா) Cricket ball

Ø      விசை- ஒரு பொருளின் வடிவத்தை மாற்றும். (.கா) Rubber Ball, சப்பாத்தி மாவு

Ø  விசையானது பொருளின் நகரும் விசைக்கு எதிர்த்திசையில் செயல்படுத்தும் போது அது பொருளின் வேகத்தை குறைக்கிறது அல்லது நிறுத்துகிறது.

Ø        நேர்கோட்டு இயக்கம்- நேர்கோட்டு பாதையில் இயங்கும்.

Ø       வளைவு பாதை இயக்கம் - திசையை தொடர்ந்து மாற்றி கொண்டே இருக்கும்

Ø       வட்ட பாதை இயக்கம் - கயிற்றின் முனையில் ஒரு கல்லை  கட்டி சுற்றுதல்.

Ø  சுழற்சி இயக்கம் - ஒரு பொருள் அதன் அச்சினை மையமான கொண்டு இயங்குகிறது.

Ø     அலைவு இயக்கம்- ஒரு புள்ளியை மையப்படுத்தி முன்னும் பின்னும் அல்லது இட மற்றும் வலது மாறி மாறி நகர்தல்.

Ø     அதிர்வுறுதல் - அலையானது அதி வேகமான நடைபெறும்

Ø     கால ஒழுங்கு இயக்கம் - குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் நடைபெறும். எ.கா- கடிகாரம்

Ø     கால ஒழுங்கற்ற இயக்கம் - குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் நடை பெறாது

Ø     அலைவு இயக்கம் - அனைத்தும் கால ஒழுங்கு நடைபெறும்.

Ø     ஓரலகு காலத்தில் ஒரு பொருள் கடந்த தூரமே அதன் வேகமாகும்.

Ø     வேகம் (s) = கடந்த தொலைவு (d) /எடுத்துக்கொண்ட காலம் (t)  

Ø     தொலைவின் SI அலகு மீட்டர் (m). காலத்தின் அலகு வினாடி (s). எனவே, மீட்டர்/வினாடி (m/s) என்பது வேகத்திற்கான SI அலகாகும்.

Ø     கடந்த தொலைவு (d) = வேகம் (s) x காலம் (t)

Ø     உசைன் போல்ட் 100மீ தூரத்தினை 9.58 வினாடிகளில் கடந்து உலகசாதனை

Ø     காலம் (t) = கடந்த தொலைவு (d) / வேகம் (s)

Ø  சீரான இயக்கம் - குறிப்பிட்ட கால இடைவெளியில் சீரான வேகத்தில் இயங்கும்.

Ø    சீரற்ற இயக்கம்  - மாறுபட்ட வேகத்தில் இயங்கும்

Ø     'ரோபாட்டா' என்ற செக்கோஸ்லோவாக்கியா வார்த்தையிலிருந்து  ரோபாட் என்ற வார்த்தையானது உருவாக்கப்பட்டது.

Ø     பொருள் - 'உத்தரவுக்குப் படிந்த ஊழியர்' .

Ø   ரோபாட்டிக்ஸ் என்பது ரோபாட்டுகளைப் பற்றி அறியும் அறிவியல் பிரிவு ஆகும்.

Ø          இராணுவப் பயன்பாட்டிற்கான நான்கு கால் ரோபோ

Ø          செயற்கை நுண்ணறிவு- ரோபோட் யோசிக்கும் திறன்

Ø          மின்னணு உணர்வி -  ரோபாட் கண்கள் காதுகள்

Ø          நானோரோபாட்டுகள் - மிகச் சிறிய ரோபாட்டுக்கள்

Ø   தொலைவு - ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை  அடைவதற்கு, ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம்.

Ø      இடப்பெயர்ச்சி - துவக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிகக் குறைந்த நேர்க்கோட்டுத் தொலைவு

Ø          தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி SI அலகு - மீட்டர் (மீ).

Ø  நாட்டிகல் மைல் - வான் மற்றும் கடல் வழிப் போக்குவரத்துகளில் தொலைவினை அளவிடப் பயன்படுத்தப்படும் அலகு.

Ø          ஒரு நாட்டிகல் மைல் - 1852 கி.மீ.

Ø          நாட் - கப்பல் மற்றும் விமானங்களின் வேகத்தை அளவிடப் பயன்படும் அலகு .     ஒரு மணி நேரத்தில் ஒருநாட்டிகல் மைல் தொலைவை கடக்கும்.

Ø          1 கி.மீ / மணி = 5 / 18 மீ / வி . அதாவது , 1 கி.மீ = 1000 மீ ஒரு மணி = 3600 வி

    1 கி.மீ / மணி = 1000 மீ / 3600 வி = 5 / 18 மீ / வி

Ø          ஆமை - 0.1 மீ / வி

Ø          மனிதர்களின் நடையின் வேகம்  - 1.4 மீ / வி

Ø          விழும் மழைத்துளியின் வேகம் - 9-10 மீ / வி

Ø          ஓடும் பூனையின் வேகம் - 14 மீ / வி

Ø          சைக்கிளின் வேகம்  - 20 - 25 கி.மீ / மணி

Ø          சிறுத்தை ஓடும் வேகம்  - 31 மீ / வி

Ø          பந்தினை எறியும் வேகம் -  90-100 மைல் / மணி

Ø          விமானத்தின் வேகம் - 180 மீ / வி

Ø          ராக்கெட்டின் வேகம் -5200 மீ / வி

Ø          திசைவேகம் (V) = இடப்பெயர்ச்சி  / காலம்

Ø          திசைவேகத்தின் SI அலகு மீட்டர் / விநாடி

Ø          சீரான திசைவேகம் - வெற்றிடத்தில் பயணம் செய்யும் ஒளி.

Ø    சீரற்ற திசைவேகம் - இரயில் நிலையத்திற்கு வரும் அல்லது அங்கிருந்து புறப்படும் தொடர்வண்டியின் இயக்கம்.

Ø      திசைவேகம் மாறுபடும் வீதம் முடுக்கம்

Ø      முடுக்கம் - இறுதித் திசைவேகம் (v) – ஆரம்பத் திசைவேகம் (u) / காலம் (t)

Ø     முடுக்கத்தின் SI அலகு மீ / வி2

Ø      நேர் முடுக்கம் - திசைவேகமானது அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

Ø      எதிர்முடுக்கம் - திசைவேகமானது குறைந்து கொண்டே இருக்கும்.

Ø      சீரான முடுக்கம் - சீரானதாக அதிகரித்தல் அல்லது குறைதல்.

Ø      சீரற்ற முடுக்கம் - ஒவ்வொரு விநாடியிலும் திசைவேக மாற்றம் மாறுபடும்

Ø  எப்புள்ளியில் ஒரு பொருளின் எடை முழுவதும் செயல்படுவது போல் தோன்றுகிறதோ அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படும்.

Ø      சமநிலை - ஒரு பொருளை அதே நிலையில் வைத்துக்கொள்ளும் திறன்

    1. உறுதிச்சமநிலை      2. உறுதியற்ற சமநிலை      3. நடுநிலை சமநிலை

    ஈர்ப்பு மையம்

Ø      1.குறைந்த உயரத்தில் அமைக்கப்பட வேண்டும்.

Ø      2.அடிப்பரப்பினை அதிகரிக்க வேண்டும்.

Ø      3. அடிப்பகுதி கனமாக இருக்கும்

Ø      .கா. பேருந்து , பந்தயக் கார்கள்மேசை விளக்குகள், காற்றாடிகள்

Ø  தஞ்சாவூர் பொம்மை - ஈர்ப்பு மையமும், அதன் மொத்த எடையும்     பொம்மையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது.

Ø      எண்மதிப்பும், திசையும் கொண்டுள்ளதால் விசை ஒரு வெக்டர் அளவு ஆகும்.     இது நியூட்டன் (N) என்ற அலகால் அளக்கப்படுகிறது.

Ø      அழுத்தம் = உந்து விசை (அ) விசை / பரப்பு  

Ø      அழுத்தத்தின் SI அலகு - பாஸ்கல் (பிரெஞ்ச் அறிவியல் அறிஞர் பிளெய்ஸ்     பாஸ்கல் நினைவாக)

Ø      1 பாஸ்கல் = 1 Nm-2

Ø      எந்தவொரு பொருளின் புறப்பரப் பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை உந்து விசை எனப்படும்.

Ø      முதுகில் சுமந்து செல்லும் பைகள் தோளின் மீது செலுத்தும் அழுத்தத்தை     குறைக்கவும் தோளின் மீதான தொடு பரப்பை அதிகரிக்கவும் அகலமான     பட்டைகள் அமைக்கப்படுகின்றன .

Ø      வாகனங்களின் டயர்கள் தட்டையாக இருந்தால் சாலைகளில் ஓட்டுவது     கடினமாக இருக்கும்.

Ø      வளிமண்டல அழுத்தம் - பாரோமீட்டர் என்ற கருவியால் அளக்கப்படுகிறது.     டாரிசெல்லி என்ற அறிவியல் அறிஞர் பாரோமீட்டரைக் கண்டறிந்தார் .

Ø  புவிப்பரப்பிலிருந்து உயரம் அதிகரிக்கும் போது வளிமண்டல அழுத்தம் குறைகிறது.

Ø      வளிமண்ட ல அழுத்தத்தின் SI அலகு - நியூட்டன் () பாஸ்கல்

Ø   பொருளின் எடை மேல்நோக்கு விசையை விட குறைவாக இருந்தால்        பொருளானது மிதக்கும்; அதிகமாக இருந்தால் மூழ்கிவிடும்.

Ø      மானோ மீட்டர் - திரவ அழுத்தத்தில் உள்ள வேறுபாடுகளை அறிய உதவும்     கருவி

Ø      நீரின் பரப்பு இழுவிசை காரணமாக நீர்ச்சிலந்தியானது நீரின் பரப்பில் எளிதாக     நடக்கிறது.

Ø      கடல் கொந்தளிப்பின் போது மாலுமிகள் கப்பலைச் சுற்றிலும் சோப்புத் துகள்கள் அல்லது எண்ணெயைக் கொட்டுவார்கள்.

Ø      பாகியல் விசை CGS அலகுமுறையில் பாய்ல் என்ற அலகாலும், SI அலகு     முறையில் Kg m-1s-1 அல்லது N s m-2 என்ற அலகாலும் அளக்கப்படுகிறது.