பருப்பொருள்கள் - அனைத்தும் வெறும் கண்களால் பார்க்க இயலாத மிக நுண்ணிய துகள்களால் ஆனவை
பென்சிலில்
பயன்படுத்தப்படும் கிராபைட் தண்டு கார்பன் தனிமத்தினால் ஆனது.
அணு
என்பது பருப்பொருளின் அடிப்படை அலகு ஆகும்.
அணு - மிகச் சிறந்த ஒளியியல் நுண்ணோக்கியினைக் கொண்டும் நம்மால் காண இயலாது.
அண்டத்தில் பெரும்பான்மையாகக்
காணப்படும் அணு 74% ஹைட்ரஜன் அணுவாகும்.
பூமியின் மீது காணப்படும்
மூன்று முக்கிய அணுக்கள் - இரும்பு, ஆக்சிஜன் மற்றும் சிலிக்கான் ஆகும்.
ஓசோன் -
மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இணைவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
நீர் (H2O)
- ஒரு ஆக்சிஜன் (O), இரண்டு ஹைட்ரஜன் (H2) அணுக்களும் இணைவதால் உருவாகிறது.
ஓரணு மூலக்கூறுகள் - மந்த வாயுக்கள்.
ஈரணு மூலக்கூறுகள் - ஆக்சிஜன், நைட்ரிக் ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன்.
மூவணு மூலக்கூறுகள் - ஓசோன், சல்பர் டை ஆக்சைடு, கார்பன்-டை-ஆக்சைடு
பல அணு மூலக்கூறுகள் - பாஸ்பேட், சல்பர் மற்றும் பிற
பிஸ்மத் என்பது
இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு தனிமம் ஆகும்.
இதை பிற தனிமங்களுடன்
இணைத்து வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சையளிக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்
சாதாரண உப்பு,
சோடியம் மற்றும் குளோரின் ஆகிய இரு தனிமங்களைக் கொண்டுள்ளது.
மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் - வெடி பொருள்கள் தயாரிக்கப்
பயன்படுகின்றன.
சல்பர் -
விவசாயத்தில் உரமாக பயன்படுகிறது.
காலியம் -
அலைபேசி தயாரிப்பிலும் பயன்படுகின்றன,
சிலிக்கன்
- கணினி சிப்புகள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன.
இந்நாள் வரை 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள்,
94 தனிமங்கள் இயற்கையாகக் கிடைக்கின்றன. 24 தனிமங்கள் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன.
இராபர்ட் பாயில் என்ற
விஞ்ஞானியே முதன் முதலில் தனிமம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். வெற்றிடத்தின்
தன்மையை
முதன்முதலில் கூறியவரும்
இவரே.
உலோகங்கள்
1. உலோகங்கள் கடினமானவை மற்றும் பளபளப்பானவை.
2. சோடியம் மட்டும் மென்மையான உலோகம் ஆகும்.
3. பாதரசம் தவிர பிற உலோகங்கள் அறை வெப்பநிலையில்
திண்ம நிலையில் காணப்படுகின்றன.
4. உலோகங்களை வளைக்க முடியும் அல்லது தகடாக
மாற்ற முடியும். இவற்றைக் கம்பியாக நீட்ட முடியும்.
5. மின்னோட்டம் மற்றும் வெப்பத்தினை நன்கு கடத்தக்கூடியவை.
6. எடுத்துக்காட்டு - தாமிரம், காரீயம், டின்,
நிக்கல், இரும்பு, துத்தநாகம், தங்கம், மெக்னீசியம் மற்றும் கால்சியம், வெள்ளி, காப்பர்,
அலுமினியம்.
அலோகங்கள்
1. பொதுவாக அலோகங்கள் பளபளப்பற்றவை,
2. .ஆனால், வைரம் பளபளப்பானதும் பூமியில் கிடைக்கக்கூடிய
தனிமங்களுள் கடினமானதும் ஆகும்.
3. அலோகங்கள் திண்மம், நீர்மம் மற்றும் வாயு
நிலையில் இருக்கலாம்.
4. ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் குளோரின் போன்றவை
அறை வெப்பநிலையில் வாயு நிலையில் உள்ளன.
5. கார்பன், அயோடின், சல்பர் மற்றும் பாஸ்பரஸ்
போன்றவை அறை வெப்பநிலையில் திண்மநிலையில் காணப்படுகின்றன
6. அறைவெப்பநிலையில் திரவ நிலையில் காணப்படும்
ஒரே அலோகம் புரோமின் ஆகும்.
7. அலோகங்கள் வெப்பம் மற்றும் மின்சாரத்தை அரிதாகக்
கடத்தக்கூடியவை. இருப்பினும் கார்பனின் புறவேற்றுமை வடிவமான கிராபைட் நன்கு மின்சாரத்தைக்
கடத்தக்கூடியதாகும்.
உலோகங்கள் |
அலோகங்கள் |
உலோகங்கள் பளபளப்பானவை. |
அலோகங்கள் பளபளப்புத் தன்மையற்றவை. |
இவை கடினமானவை. |
இவை மென்மையானவை |
உலோகங்களைவளைக்க முடியும் அவற்றை தகடாக அடிக்கலாம், கம்பியாகவும்
நீட்டலாம். |
அலோகங்களை வளைக்க முடியாது தகடாக அடிக்க
முடியாது, கம்பியாகவும் நீட்ட இயலாது. |
உலோகங்கள் மின்சாரத்தை, வெப்பத்தை நன்கு
கடத்தக்கூடியவை. |
அலோகங்கள் மின்சாரத்தை, வெப்பத்தை அரிதிற்கடத்தும்
உடையவை. |
உலோகங்களைத்தட்டும்போது ஒலியெழுப்புகின்றன. ஆகையால் இவைமணிகள்
செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. |
அலோகங்கள் தட்டப்படும்பொழுது ஒலியெழுப்பும் தன்மையற்றவை. |
உலோகப்போலிகள்:
1. ஆங்கிலம் அல்லது இலத்தீன் மொழிப் பெயர்களாக
உள்ளன.
2. இக்குறியீடுகள் International Union of
Pure and Applied Chemistry (IUPAC) என்ற
அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
3. குறியீடுகளை, தகுந்த முறையில் பயன்படுத்திய
முதல் வேதியியல் அறிஞர் டால்டன் ஆவார்.
4. ஒரு தனிமத்தின் பெயரில் உள்ள ஒன்று அல்லது
இரண்டு எழுத்துகளைப்பயன்படுத்தி ஒரு தனிமத்தின் பெயரை எழுதலாம் என்று பெர்சிலியஸ் என்பவர் பரிந்துரைத்தார். ஆக்சிஜனின்
குறியீடு O எனவும், ஹைட்ரஜனின் குறியீடு H எனவும்.
5. எடுத்துக்காட்டு - சிலிக்கன், ஆர்சனிக், ஆன்டிமணி மற்றும்
போரான்
காப்பர் என்ற பெயர் சைப்ரஸ் என்ற பெயரில் இருந்து உருவாக்கப்பட்டது.
தங்கம் (Gold) என்பது மஞ்சள் எனப் பொருள்
மனித உடலின் நிறையில் ஏறத்தாழ 99 சதவீதம்
நிறையானது ஆறு வேதியியல் தனிமங்களால் மட்டும் ஆனதாகும். அவை: ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன்,
நைட்ரஜன், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்.
சாதாரண
உப்பு (சோடியம் குளோரைடு)
- சோடியம் மற்றும் குளோரின் ஆகிய இரு தனிமங்களைக்
கொண்ட சேர்மம்
சேர்மங்களை இயற்பியல் முறையில் பிரிக்க இயலாது.
வேதியியல் முறையில் மட்டுமே பிரிக்க இயலும்.
பெயர்கள் |
வாய்ப்பாடு |
நீர் |
H2O |
குளுக்கோஸ் |
C6H12O6 |
சோடியம்
குளோரைடு |
NaCl |
எத்தனால் |
C2H5OH |
அம்மோனியா |
NH3 |
கந்தக
அமிலம் |
H2SO4 |
மீத்தேன் |
CH4 |
சுக்ரோஸ் |
C12H22O11 |
சோடியம்
குளோரைடு (NaCl) : 1 சோடியம்
அணு மற்றும் 1 குளோரின் அணு
அம்மோனியா
(NH3) : 1 நைட்ரஜன் மற்றும்
3 ஹைட்ரஜன் அணுக்கள்
குளுக்கோஸ்
(C6H12O6): 6 கார்பன் அணுக்கள்,
12 ஹைட்ரஜன் அணுக்கள், 6 ஆக்சிஜன் அணுக்கள்
வேதியியல்
வாய்ப்பாடு என்பது ஒரு
பொருளின் ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையையும், அணுக்களின் வகைகளையும்
நமக்குத் தெரிவிக்கிறது.
0 Comments