8th 1st TERM - நுண்ணுயிரிகள்
1. வைரஸ் என்பது எம்மொழிச்சொல் - இலத்தீன்
2. வைரஸ் என்பது - விஷம் எனப் பொருள்.
3. வைரஸைப் பற்றிய படிப்பு – வைராலஜி.
4. வைரஸ்கள் பாக்டீரியாவைக் காட்டிலும் எத்தனை மடங்கு சிறியவை - 10,000.
5. வைரஸின் மையப்பகுதி எதனைக் கொண்டுள்ளது:
1. டி.என்.ஏ 2. ஆர்.என்.ஏ
6. பூமியில் முதன் முதலில் தோன்றிய வாழும் உயிரினம் – பாக்டீரியா.
7. பாக்டீரியாவைப் பற்றிய படிப்பு – பாக்டீரியாலஜி.
8. பாக்டீரியா எத்தனை வகைப்படும் – 2.
9. பாக்டீரியாவின் உட்கரு பொருள்கள்- நியூக்ளியாய்டு.
10. சைட்டோபிளாசத்தில் கூடுதலாகக் காணப்படும் குரோமோசோமல் டி.என்.ஏ எவ்வாறு அழைக்கப்படுகிறது - பிளாஸ்மிட்
11. இடப்பெயர்ச்சி எதனால் நடைபெறுகிறது- கசையிழை.
12. பேசில்லை - கோல் வடிவ பாக்டீரியா.
13. கோல் வடிவ பாக்டீரியாக்கு எடுத்துக்காட்டு: பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்.
14. ஸ்பைரில்லா - சுருள் வடிவ பாக்டீரியா.
15. சுருள் வடிவ பாக்டீரியாக்கு எடுத்துக்காட்டு: ஹெலிகோபாக்டர் பைலோரி.
16. காக்கை - கோள (அ) பந்து வடிவ பாக்டீரியா.
17. கோள (அ) பந்து வடிவ பாக்டீரியாக்கு எடுத்துக்காட்டு: ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா (அ) ஸ்டைபைலோகாக்கஸ்.
18. விப்ரியோ - கமா வடிவ பாக்டீரியா
19. கமா வடிவ பாக்டீரியாக்கு எடுத்துக்காட்டு: விப்ரியோ காலரா.
20. ஒற்றைக் கசையிழைக்கு எடுத்துக்காட்டு: விப்ரியோ காலார.
21. ஒரு முனை கற்றைக் கசையிழைக்கு எடுத்துக்காட்டு: சூடோமோனாஸ்.
22. இரு முனை கற்றைக் கசையிழைக்கு எ.கா: ரோடோஸ்பைரில்லம் ரூபரம்.
23. கற்றுக் கசையிழைக்கு எடுத்துக்காட்டு: எ.கோலை.
24. கசையிழையற்றவைக்கு எடுத்துக்காட்டு: கோரினிபாக்டீரியம் டிப்தீரியா.
25. ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்களுக்கு எடுத்துக்காட்டு: சயனோபாக்டீரியா.
26. பாக்டீரியாக்கள் சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலுக்குப் பதிலாக எந்த வேதிபொருள்களைப் பயன்படுத்தி உணவைத் தயாரிக்கின்றன – அம்மோனியா, ஹைட்ரஜன் சல்பைடு.
27. அசாதாரண சூழலில் வாழும் பாக்டீரியாக்கள் சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலுக்குப் பதிலாக வேதிப்பொருள்களைப் பயன்படுத்தி உணவைத் தயாரிக்கும் நிகழ்வு - வேதித்தற்சார்பு உணவூட்டம்.
28. கூட்டுயிர் வாழ்க்கை முறையை மேற்கொள்ளும் பாக்டீரியா - எ.கோலை.
29. பூஞ்சைகளைப் பற்றிய படிப்பு – மைக்காலஜி.
30. பூஞ்சைகளில் எத்தனை இனங்கள் உள்ளன - 70,000.
31. ஒரு செல்லாலான பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு: ஈஸ்ட்.
32. ஈஸ்ட்டினால் உற்பத்தி செய்யப்படும் எனும் நொதியின் உதவியினால் நொதித்தல் நடைபெறுகிறது-சைமேஸ்
33. பல செல்களாலான பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு: காளான்
34. மண்ணின் மேல் அடுக்கில் உள்ள காளாணின் கனியுறுப்பின் அடியில் அமைந்துள்ளது- மைசீலியம்
35. ஹைபாக்களின் சுவர்கள் எதனால் ஆனது – கைட்டின் , செல்லுலோஸ்
36. மட்குண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு: ரைசோபஸ் , பெனிசிலியம் , அகாரிகஸ்
37. ஒட்டுண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு: பக்சீனியா , அல்புகோ , உஸ்டிலோகோ
38. கூட்டுயிரிகளுக்கு எடுத்துக்காட்டு: மைக்கோரைசா
39. ஆல்காவைப் பற்றியப் படிப்பு - ஆல்காலஜி , பைகாலஜி
40. ஒரு செல்லாலான நகரும் திறனுடைய நன்னீர் வாழ் பாசி –கிளாமிடோமோனாஸ்
41. செல் சுவருக்கும் பசுங்கணிகத்திற்கும் இடையில் காணப்படுவது – சைட்டோபிளாசம்
42. பிற ஒளிச்சேர்க்கை நிறமிகள்:
1. பியூகோசாந்தின் - பழுப்பு
2. சாந்தோஃபில்
- மஞ்சள்
3. பைகோ எரித்ரின் - சிவப்பு
4. பைக்கோ சயனின் - நீலம்
43. புரோட்டோசோவாவின் கிரேக்க சொல் :
1. புரோட்டோஸ் – முதல் 2. சோவன் – விலங்கு
44. புரோட்டோசோவா - புரோட்டிஸ்டா எனும் உலகில் இடம் பெற்றுள்ளன
45. புரோட்டோசோவாவைப் பற்றியப் படிப்பு – புரோட்டோவிலங்கியல்
46. புரோட்டோசோவா எத்தனை மைக்ரான் அளவுடையவை - 2 முதல் 200
47. புரோட்டோசோவாக்களின் வகைகள் : 4.
1. சிலியேட்டா 2. பிளாஜெல்லேட்டா
3. சூடோபோடியா 4. ஸ்போரோசோவா
48. சிலியாக்களுக்கு எடுத்துக்காட்டு: பாரமீசியம்.
49. கசையிழைகளுக்கு எடுத்துக்காட்டு: யூக்ளினா.
50. போலிக்கால்களுக்கு எடுத்துக்காட்டு: அமீபா.
51. ஒட்டுண்ணிகளுக்கு எடுத்துக்காட்டு: பிளாஸ்மோடியம்.
52. செல் சவ்வு, சைட்டோபிளாசம் மற்றும் உட்கருவைக் கொண்டது – அமீபா.
53. போலிக்கால்கள் இலத்தீன் மொழியில் - பொய்க் கால்கள்
54. ஆன்டி' என்ற வார்த்தையின் பொருள் - எதிராக.
55. நுண்ணுயிரிகள் -
மிகவும் சிறிய உயிரினம்.
56. பெனிசிலின் என்ற மருந்தை உருவாக்கியவர் - சர். அலெக்சாண்டர் பிளம்மிங்.
57. பெனிசிலின் மருந்துடகண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு-1928.
58. பெனிசிலின் மருந்து எந்த பூஞ்சையிலிருந்து பெறப்பட்டது - பெனிசிலியம் கிரைசோஜீனம்.
59. பெனிசிலின் மருந்து எந்த நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது- டெட்டனஸ், டிப்தீரியா.
60. ஸ்ட்ரெப்டோமைசின் எனும் எதிர்உயிர்க்கொல்லி எந்த பாக்டீரியா விலிருந்து பெறப்படுகிறது – ஸ்ரெப்டோமைசிஸ்.
61. சூடோயுரிடிமைசின் என்ற எதிர்உயிர்க் கொல்லி எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது – இத்தாலி.
62. சுண்டெலிகளில் பாக்டீரியத் தொற்றினை குணமாக்கப் பயன்படுத்தப்பட்ட எதிர் உயிர்க்கொல்லி - சூடோயுரிடிமைசின்
63. முதன் முதலில் பெரியம்மைக்கான தடுப்பூசியினைக் கண்டறிந்தவர்- எட்வர்ட்ஜென்னர்.
64. “வாக்சினேஷன்” என்ற சொல் யாரால் சூட்டப்பட்டது - எட்வரட் ஜென்னர்.
65. வாக்சினேஷன் என்ற நோய்த்தடுப்பு மருந்துக்கு எடுத்துக்காட்டு:
1. தட்டம்மைக்கான MMR தடுப்பூசி 2. பொன்னுக்கு வீங்கி
3. ரூபெல்லா மற்றும் காசநோய்க்கான BCG தடுப்பூசி
66. நுண்ணுயிரிகள் கழிவுகளை மட்கச் செய்வதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது-சிதைப்பவைகள்
67. வளிமண்டல நைட்ரஜனை நைட்ரேட்டுகளாக மண்ணில் நிலைநிறுத்தி மண்ணை வளப்படத்துபவை - ரைசோபியம் பாக்டீரியங்கள்.
68. மண்ணில் தனித்து வாழும் பாக்டீரியங்கள் எவை
1. சயனோ பாக்டீரியா 2. நாஸ்டாக்
69. பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் நுண்ணுயிரிகள் - பேசில்லஸ் துரின்ஞியன்ஸிஸ்.
70. வேர்களுக்கு பாதுகாப்பளிக்கும் நுண்ணுயிரி – டிரைக்கோடெர்மா.
71. காற்று சுவாச நுண்ணுயிரிகள் உட்கொள்ளும் கரிமப்பொருள்களுக்கு எடுத்துக்காட்டு: நைட்ரோபாக்டர்.
72. காற்றில்லா நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பிறகு பயன்படுவது – மெத்தனோஜென்கள்.
73. மிருதுவாக்குதல் நுண்ணுயிரிகளுக்கு எடுத்துக்காட்டு: சூடோமோனாஸ் ஏருஜினோஸா.
74. எந்த பாக்டீரியத்தினால் பாலில் உள்ள லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக மாறுகிறது- லேக்டோ பேசில்லஸ்
75. மனிதனின் குடலில் வாழும் எந்த பாக்டீரியா உணவு செரி மானத்தில் உதவுகிறது- லாக்டோபேகில்லஸ் அசிட்டோட்பிலஸ்.
76. அமிலத்தை விரும்பக்கூடிய பாக்டீரியா - லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ்.
77. லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ் எனும் பாக்டீரியா எதில் காணப்படுகிறது
1. மோர் , தயிர் 2. புளிப்புக் கூழ்மங்கள்
3. உறைந்த பனிக்கூழ்
78. லாக்டிக் அமில பாக்டீரியங்கள் என்றழைக்கப்படும் பாக்டீரியா - லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபிலஸ்.
79. காற்றின் மூலம் பரவும் வைரஸ் காய்ச்சல் – ஃப்ளு.
80. மனிதனுக்கு உண்டாகும் நோய்கள் - நுண்ணுயிரிகள்
1. காசநோய் - மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
2. காலரா - விப்ரியோ காலரா
3. சாதாரண சளி - இன்புளுயன்சா வைரஸ்
4. ரேபிஸ் - ரேப்டோ விரிடி வைரஸ்
5. அமீபிக் சீதபேதி - எண்டமீபா ஹிஸ்டாலைடிகா
6. மலேரியா – பிளாஸ்மோடியம்.
81. நுண்ணுயிரிகளால் விலங்குகளில் உண்டாகும் நோய்:
1. ஆந்த்ராக்ஸ் - பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் பாக்டீரியா
2. வாய் மற்றும் கால்க்குளம்பு நோய் - ஆப்ரோவைரஸ்
82. நுண்ணுயிரிகளால் தாவரங்களில் உண்டாகும் நோய்கள்:
சிட்ரஸ் கேன்சர் - சாந்தோமோனாஸ் ஆக்ஸனோபோடிஸ்
உருளைக்கிழங்கு பிளைட் நோய் - பைட்டோபைத்தோரா இன்பெஸ்டன்ஸ்
83. ஆப்பிரிக்க தூக்க வியாதி எதனால் உண்டாகிறது – டிரிபனோசோமோ.
84. ஆப்பரிக்க தூக்க வியாதி எது கடிப்பதன் மூலம் பரவுகிறது - செட்சீ எனும் ஈக்கள்
85. பதப்படுத்துதல் என்ற முறையை கண்டுபிடித்தவர் - லூயிஸ் பாஸ் (1862)
86. தயிர் மற்றும் பிற நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட பால் பொருள்களில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் உயிருள்ள உணவுப் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது - புரோபயாட்டிக்குகள்
87. புரோபயாட்டிக்குகளுக்கு எடுத்துக்காட்டு:
1. லாக்டோபேசில்லஸ் 2. அசிட்டோஃபிலஸ்
3. பைபிடோபாக்டீரியம் பைபிடம்
88. வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த உதவும் புரோபயாட்டிக்குகள்:
1. பைபிடோபாக்டீரியம் பைபிடம் 2. ஹெலிகோபாக்டர் பைலோரியால்
89. குழந்தைப் பருவத்தில் உண்டாகும் மலச்சிக்கலைக் குணப்படுத்தப்பயன்படும் புரோபயாட்டிக் சிற்றினம் - பைபிடோபாக்டீரியம் ஃபிரிவே
90. பிரியான் என்ற சொல் - புரதத்தாலான தொற்றுத் துகள் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது
91. திடீர்மாற்றமடைந்த தீங்கு தராத புரதங்கள் – பிரியான்கள்.
92. ஒரு முழுமையான வைரஸ் துகள் - விரியான்கள்
93. விரியான்கள் கேப்சிட் என்றழைக்கப்படும் வெளிப்புற புரத உறையையும் உட்புற மையத்தில் நியூக்ளிக் அமிலத்தையும் கொண்டுள்ளது.
94. நுண்ணுயிரிகள் - மைக்ரான் ஆல் அளவிடப்படுகின்றன.
95. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை – வைரஸ்.
96. பாக்டீரியா ஒரு - புரோகேரியோட்டிக் நுண்ணுயிரியாகும்
97. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன- 2
98. ஆல்காவின் தாவர உடலம்- தாலஸ் என அழைக்கப்படுகிறது.
99. பென்சிலின் - பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுவது - பெனிசிலியம் என்றழைக்கப்படுகிறது.
100. பிரியான் - என்பவை நோய் தொற்றுடைய புரதத் துகள்களாகும்
101. செல்லுக்கு வெளியே காணைப்படும் வைரஸ்கள்- விரியான் எனப்படுகின்றன.
102. நுண்ணுயிரிகளை நுண்ணோக்கியின் உதவியுடன் காண முடியும்
103. பாக்டீரியாவின் ஒரு முனையில் கசையிழைகள் பெற்றவை- ஒரு முனை கற்றை கசையிழை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
104. ஈஸ்ட் அதிக அளவில் ஆல்கஹாலை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது.
105. பொருத்துக:
1. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா - ரைசோபியம்
2. காசநோய் - பாக்டீரியா
3. குரு - பிரியான்
4. புரோபயாட்டிக்ஸ் - லேக்டோபேசில்லஸ் அசிடோபிலஸ்
5. எட்வர்ட் ஜென்னர் - தடுப்பூசி
0 Comments