7TH 3RD TERM - அன்றாட வாழ்வில் விலங்குகள்

 1. வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளான கோழி வாத்து வான்கோழி போன்றவற்றை அவற்றின் இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வளர்ப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது பண்ணை அமைத்தல்

2. பண்ணை அமைத்தல் எத்தனை வகைப்படும் - இரண்டு:முட்டையிடுபவை, பிராய்லர் (இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை)

3. கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு சல்மோனல்லோசிஸ் எனும் நோயை எது உருவாக்குகிறது - பாக்டீரியா

4. கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு ரானிக் கெட் எனும் நோயை எது உருவாக்குகிறது - வைரஸ்

5.கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு அஸ்பர்ஜில்லஸ் எனும் நோயை எது உருவாக்குகிறது - பூஞ்சைகள்

6. ஆடு மென் உரோமக் கற்றையிலிருந்து எடுக்கப்படும் இழைக்குப் பெயர் என்ன -கம்பளி

7. ஆடு தவிர எந்தெந்த விலங்குகளிலிருந்து கம்பளி இழைகள் எடுக்கப்படுகிறது - முயல், யாக்,அல்பாகா மற்றும் ஒட்டகம்

8. கம்பளி என்ற இழை எந்த குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளின் மென் முடிக்கற்றைகளிலிருந்து பெறப்படுகிறது - கேப்ரினே

9. கம்பளியை உருவாக்க எத்தனை படிநிலைகள் உள்ளன -ஐந்து :கத்தரித்தல், தரம்பிரித்தல்,கழுவுதல் ,சிக்கெடுத்தல், நூற்றல்

10. சிக்கெடுத்தபின் கம்பளியை தட்டையானதாக மாற்றுவதற்கு என்ன பெயர் -வலை

11. பட்டுப்புழுக்கள் எவ்வளவு காலம் மட்டுமே வாழும் - இரண்டு மாதங்கள்

12. பட்டுப் புழுக்களின் இரண்டு மாத கால வாழ்நாளில் எத்தனை வளர்ச்சி நிலைகளை உடையது - 4 :முட்டை, லார்வா நிலை, கூட்டுப்புழு மற்றும் பட்டுப்பூச்சி

13. பட்டுப் பூச்சிகளை வளர்த்து அதிலிருந்து பட்டு தயாரிக்கப்படுவற்கு என்ன

பெயர் - பட்டுப்பூச்சி வளர்ப்பு அல்லது செரிகல்சர்

14. ஒரு முதிர்ந்த பெண் பட்டு பூச்சி எவ்வளவு முட்டைகள் இடும் - 500 முட்டைகள்

15. இயற்கை இழைகளிலேயே எது வலிமையான இழை - பட்டு இழை

16. மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சையின்போது தையல் நூலாக

பயன்படுத்தப்படுவது எது - பட்டு இழை

17. பட்டு உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பெறும் நாடு எது - இந்தியா

18. தமிழ்நாட்டில் எந்த இடங்கள் பட்டு உற்பத்திக்கு புகழ் பெற்றது - காஞ்சிபுரம் திருபுவனம் மற்றும் ஆரணி

19. இறந்த விலங்குகளை கையாளுவதால் கம்பளி ஆலை பணியாளர்கள் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா தொற்றால் பாதிப்படைகின்றனர். இது எவ்வாறு

அழைக்கப்படுகிறது - பிரித்தெடுப்போர்கள்

20. ஆந்த்ராக்ஸ் நோய் எந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது - பேசில்லஸ் ஆந்த்ராசிஸ்

21. எந்த மருந்துகள் ஆந்த்ராக்ஸ் நோயை குணமாக்க உதவுகின்றன - பெனிசிலின் மற்றும் சிப்ரோஃப்பிளாக்சாசின்

22.கூட்டுப் புழுக்களை அழிக்காமல் அவற்றிலிருந்து பட்டு நூலை எடுக்கலாம் என்பதை கண்டறிந்தவர் யார் - ஆந்திராவைச் சேர்ந்த குசுமா ராஜய்யா

23. விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றி படிக்கும் பிரிவுக்கு என்ன பெயர் - விலங்கு வளர்ப்பு

24. நமது சுற்றுச்சூழல் அமைச்சகம் விலங்குகளை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க எந்த ஆண்டு நான்கு புதிய சட்டங்களை கொண்டு வந்தது - 1960