6TH STD – 1ST TERM - தாவரங்கள் வாழும் உலகம்

1.     பூக்கும் தாவரங்களின் இரண்டு முக்கிய பாகங்கள்: 2

           1.     தண்டுத் தொகுப்பு                 2.     வேர்தொகுப்பு.

2.     தாவரங்களின் வேர்தொகுப்பு எத்தனை வகைப்படும்: 2

           1.     ஆணிவேர்த் தொகுப்பு             2.     சல்லி வேர்த்தொகுப்பு

3.     ஆணிவேர்தொகுப்புக்கு  எடுத்துக்காட்டு - அவரைமாவேம்பு.

4.     சல்லி வேர்தொகுப்புக்கு எடுத்துக்காட்டு நெல்புல், மக்காச்சோளம்.

5.     ஆணிவேர்த் தொகுப்பு காணப்படும் தாவரங்கள் - இரு வித்திலை தாவரங்கள்.

6.     சல்லி வேர்தொகுப்பு காணப்படும் தாவரங்கள் - ஒரு வித்திலை தாவரங்கள்.

7.     உணவை  வேர்களில் சேமிக்கும் தாவரங்கள் எடுத்துக்காட்டுகேரட்பீட்ரூட்.

8.     தண்டில் இலைகள் தோன்றும் பகுதி – கணு.

9.     தண்டையும்இலையும் இணைக்கும் பகுதி – இலைக்காம்பு.

10.   இலைகளின் பசுமை நிறத்திக்கு காரணம் – பச்சையம்.

11.   ஒளிச்சேர்க்கை தாவரங்களில் எங்கு நடைபெறுகிறது – இலை.

12.   நீராவிப்போக்கு தாவரங்களில் எதன் வழியே நடைபெறுகிறது – இலைத்துளை.

13.   மீட்டர் விட்டம் வரையில் வளரும் தாவர இலையின் பெயர் - விக்டோரியா அமேசோனிக்கா.

14.   பூவின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்: 2.

1.     பூக்கும் தாவரம்.

Ø  பூக்கும் தாவரம் எடுத்துக்காட்டுசூரியகாந்தி.

                 2.     பூவாத்  தாவரம்.

Ø  பூவாத் தாவரம் எடுத்துக்காட்டு – ரிக்ஸியா.

15.   விதைகள் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம் : 2.

           1.     ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

           2.     ஜிம்னாஸ்பெர்ம்கள்

16.   மூடிய விதைத்தாவரம் எடுத்துக்காட்டு – மா.

17.   திறந்த விதைத் தாவரம் எடுத்துக்காட்டு – சைகஸ்.

18.   உலகில் மிக நீளமான நதி - நைல் நதி - 6,650 கிமீ.

19.   இந்தியாவின் மிக நீளமான நதி - கங்கை  - 2,525 கி.மீ

20.   தாமரை தண்ணிரில் மிதக்க காரணம் - காம்பில் உள்ள காற்று இடைவெளி.

21.   உலகில் எத்தனை சதவீதம் நில வாழிடங்கள் உள்ளன – 28 %.

22.   470 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான நில வாழ் தாவரங்கள்மாஸ்கள்லிவர்வோர்ட்ஸ்.

23. தென் அமெரிக்காவில் உள்ள எந்த காடுகள் உலகிற்கான ஆக்ஸிஜன் தேவையில் பாதியைக் கொடுக்கிறது - அமேசான் மலைக் காடுகள்.

24.   பாலைவனத்தின் ஆண்டு சராசரி மழை அளவு - 25 செ.மீ.

25.   கள்ளிச்செடியில் நீர் எங்கு சேமிக்கப்படுகிறது – தண்டு.

26.   கள்ளித் தாவரத்தில் இலைகள் எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளன – முட்கள்.

27.   பாலைவன தாவரங்கள்:

           1.     சப்பாத்திக் கள்ளி                                    2.     அகேவ்

           3.     சோற்றுக் கற்றாழை                                                   4.     பிரையோபில்லம்

28.   அகேவ் தாவரத்தின் மற்றொரு பெயர் - ரயில் கற்றாழை.

29.   பாலைவனங்களின்  வகைகள் :

           1.     வெப்பவறட்சிப் பாலைவனங்கள்         2.     மித வெப்ப பாலைவனங்கள்

           3.     கடல் சார்ந்த பாலைவனங்கள்               4.     குளிர் பாலைவனங்கள்

30.   மணல் குன்றுகளால் ஆன மிகப்பெரிய இந்திய பாலைவனம் - தார் பாலைவனம்.

31.   பூமியின் மேற்பரப்பில் எத்தனை சதவீதம் கடல் நீரினால் சூழப்பட்டுள்ளது - 70%.

32.   உலக வாழிட நாளாக அனுசரிக்கப்படும் நாள் - அக்டோபர்  முதல் திங்கள் கிழமை.

33.   பற்றுக்கம்பி உள்ள தாவரங்களுக்கு எடுத்துக்காட்டு - பட்டாணிபாகற்காய்.

34.   இனிப்பு பட்டாணியில் எந்த பகுதி பற்றுக்கம்பிகளாக மாறி உள்ளது – சிற்றிலைகள்.

35.   பாகற்காய் தாவரத்தில் எந்த பாகம் பற்றுக்கம்பிகளாக மாறியுள்ளது - கோணமொட்டு.

36.   பின்னு கொடி தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சங்கு பூமல்லிகை.

37.   வளரும் பருவ நிலையில் அதிவேகமாக வளரக் கூடிய தாவரம்மூங்கில்.

38.   இலைகளின் மூன்று முக்கியப்பணிகள்:

           1.     ஒளிச்சேர்க்கை                  2.     சுவாசம்                   3.     நீராவிப் போக்கு

39.   நீரை உறிஞ்சும் பகுதி – வேர்.

40.   தண்டில் உணவு சேமிக்கு தாவரங்கள் – கரும்பு.