6TH 3RD TERM - பண்டையக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்

Ø  சங்கம் எனும் சொல் எதனைக் குறிக்கிறது - மதுரை பாண்டிய அரசர்களின் காலத்தில்         தமிழ் புலவர்களின் குழுமம்

Ø   பனை ஓலைகளில் எழுதப்பட்டிருந்த மீட்டு பதிப்பித்து வெளியிட்டவர்கள் தமிழ்            செவ்வியல் இலக்கியங்களை பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் யார் - ஆறுமுக நாவலர்(யாழ்ப்பாணம்), தாமோதரம் பிள்ளை(யாழ்ப்பாணம்), வே சாமிநாத ஐயர்

Ø  ஹத்திக்கும்பா கல்வெட்டு யாருடையது - கலிங்க நாட்டு அரசன் காரவேலன்

Ø  சங்க காலம் என அழைக்கப்படும் கால அளவு என்ன - கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரை

Ø  சங்ககாலம் எந்த காலகட்டத்தை சார்ந்தது - இரும்புக் காலம்

Ø  சங்க காலம் என்பது எந்த பண்பாட்டு காலத்தைச் சார்ந்தது - பெருங்கற்காலப் பண்பாடு

Ø  தமிழ் மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது எனும் கருத்தை கொண்டுள்ளவர் யார் - கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தமிழ் மொழி பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட்

Ø  எந்த சேர அரசன் கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார்- சேரன் செங்குட்டுவன்

Ø  எந்த அரசர் பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தார் - சேரன் செங்குட்டுவன்

Ø  சேர பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த 11 வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையை தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்த சோழ மன்னர் யார் - கரிகால சோழன்

Ø   கரிகால சோழனால் காவிரியின் குறுக்கே கற்களால் கட்டப்பட்ட அணை எதுகல்லணை

Ø  எந்த பாண்டிய அரசர் தலையாலங்கானம் எனுமிடத்தில் சேரர், சோழர் 5 வேளிர் குலத் தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தோற்கடித்தார்நெடுஞ்செழியன்

Ø  எந்த நூல் சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றதுபதிற்றுப்பத்து

Ø  எந்தப் பதினெண்கீழ்க்கணக்கு நூல் கரிகாலனின் ஆட்சியின் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றி விரிவான செய்திகளை வழங்குகின்றதுபட்டினப்பாலை

Ø  கொற்கையின் தலைவன் என போற்றப்படுபவர் யார்நெடுஞ்செழியன்

Ø  பாண்டிய அரசர்களின் நாணயங்களில் என்ன உருவம் பொறிக்கப்பட்டிருந்தது - ஒருபுறம் யானையின் வடிவம் மற்றொருபுறம் மீனின் உருவம்

Ø  எந்த பாண்டிய அரசர் பல வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார் - முதுகுடுமிப் பெருவழுதி

Ø  சேர அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன - ஆதவன்,குட்டுவன்,வானவன் இரும்பொறை

Ø  சோழ அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன - சென்னி,செம்பியன், கிள்ளி, வளவன்

Ø  பாண்டிய அரசர்கள் சூடிக்கொண்ட பட்டங்கள் என்னென்ன- மாறன், வழுதி, செழியன், தென்னர்

Ø  அரசு அதிகாரத்தின் சின்னங்களாக கருதப்பட்டவை எவை - செங்கோல்,முரசு  வெண்கொற்றக்குடை ஆகியவை

Ø  சேரர்கள் என்ன மாலையை அணிந்தனர்பனம்பூமாலை

Ø  சேரர்களின் துறைமுகம் எது - முசிறி அல்லது தொண்டி

Ø  சேரர்களின் தலைநகரம் எது - கரூர்/வஞ்சி

Ø   சேரர்களின் சின்னம்- வில் அம்பு

Ø  சோழர்கள் என்ன மாலையை அணிந்தனர் - அத்திப் பூ மாலை

Ø   சோழர்களின் துறைமுக நகரம்புகார்

Ø  சோழர்களின் தலைநகர் - உறையூர் அல்லது புகார்

Ø  சோழர்களின் சின்னம்புலி

Ø  பாண்டியர்கள் என்ன மாலையை அணிந்தனர் - வேப்பம்பூ மாலை

Ø  பாண்டியர்களின் துறைமுக நகரம்கொற்கை

Ø  பாண்டியர்களின் தலைநகரம்மதுரை

Ø  பாண்டியர்களின் சின்னம் - இரண்டு மீன்கள்

Ø  ஆய் என்னும் பெயர் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது - பழந்தமிழ் சொல்லான ஆயர் (பொருள்- ஆநிரை மேய்ப்போர்)

Ø  சங்க காலத்து ஆய் மன்னர்களில் முக்கியமானவர்களின் பெயர்கள் என்னென்ன - அந்திரன், திதியன்,நன்னன்

Ø  கடை ஏழு வள்ளல்கள் என அழைக்கப்படுபவர்கள் யார் - பாரி, காரி, ஓரி, பேகன், ஆய் அதியமான், நள்ளி

Ø  கிழார் என்பவர் யார்கிராமத்தலைவர்

Ø  அரசர் வேறு எவ்வாறு அழைக்கப்பட்டார் - 'கோன்' எனும் சொல்லின் சுருக்கமான கோ,வேந்தன்,மன்னன், கொற்றவன், இறைவன்

Ø  அரசருக்கு பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது? முடிசூட்டுவிழா அல்லது அரசு கட்டிலேறுதல்

Ø  இளவரசர் எவ்வாறு அழைக்கப்படுவார்கோமகன்

Ø  இளவரசருக்கு இளையோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - இளங்கோ,இளஞ்செழியன் இளஞ்சேரல்

Ø  நிலவரி மூலம் பெறப்பட்ட வரிகள் / வருமானம் எவ்வாறு அழைக்கப்பட்டதுஇறை

Ø  அரசருடைய சபை எவ்வாறு அழைக்கப்பட்டதுஅரசவை

Ø  அரசர்களின் ஐந்து வித கடமைகளை என்னென்ன - கல்வி கற்பதை ஊக்குவிப்பது சடங்குகளை நடத்துவது, பரிசுகள் வழங்குவது, மக்களை பாதுகாப்பது, குற்றவாளிகளைத் தண்டிப்பது

Ø  அரசர்களுக்கு உதவிசெய்யும் குழுக்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தனஐம்பெருங்குழு மற்றும் எண்பேராயம்

Ø  அரசருடைய படை எத்தனை பிரிவுகளைக் கொண்டிருந்தது - காலாட்படை,குதிரைப்படை யானைப்படை தேர்ப்படை

Ø  படைத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார் - தானைத் தலைவன்

Ø  சற்று தொலைவிலிருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படுவதற்கு பெயரென்ன - தோமாரம்(எறியீட்டி)

Ø  ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது - படைக் கொட்டில்

Ø  தலைநகரில் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டதுஅவை

Ø  கிராமங்களில் தீர்ப்பு வழங்கப்படும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனமன்றங்கள்

Ø  ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும் எவ்வாறு அழைக்கப்பட்டது  - மண்டலம்

Ø  நாடு எவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தது - மண்டலம்,நாடு, கூற்றம், ஊர்,பேரூர்,சிற்றூர்,மூதூர்

Ø  கடற்கரையோர நகரங்களுக்கு என்ன பெயர்பட்டினம்

Ø  துறைமுகங்களை குறிக்கும் பொதுவான சொல் எதுபுகார்

Ø  சங்க காலத்தில் நிலம் எத்தனை வகையாகப் பிரிக்கப்பட்டு இருந்தது - ஐந்து திணைகள்

Ø  மருத நிலம் எவ்வாறு அழைக்கப்பட்டது - மென்புலம் (நன்செய்)

Ø   நெய்தல்திணை தவிர மற்றவை எவ்வாறு அழைக்கப்பட்டன - வன்புலம் (புன்செய்)

Ø  மலையும் மலை சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்குறிஞ்சித்திணை

Ø  குறிஞ்சி திணையின் தொழிலென்ன - வேட்டையாடுதல் /சேகரித்தல்

Ø  குறிஞ்சித் திணையின் மக்கள் யார் - குறவர் குறத்தியர்

Ø  குறிஞ்சித் திணையின் கடவுள் யார்முருகன்

Ø  காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும் - முல்லை திணை

Ø  முல்லைத் திணையின் தொழில் என்ன - ஆநிரை மேய்த்தல்

Ø  முல்லைத் திணையின் மக்கள் யார் - ஆயர் ஆய்ச்சியர்

Ø  முல்லைத்திணையின் கடவுள் யார்மாயோன்

Ø  வயலும் வயல் சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படும்மருதத்திணை

Ø   மருதத் திணையின் தொழில் என்னவேளாண்மை

Ø   மருதத் திணையின் மக்கள் யார் - உழவன் உழத்தியர்

Ø  மருதத் திணையின் கடவுள் யார்இந்திரன்

Ø  கடலும் கடல் சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும் - நெய்தல் திணை

Ø   நெய்தல் திணையின் தொழில் என்ன - மீன்பிடித்தல் /உப்பு உற்பத்தி

Ø  நெய்தல் திணையின் மக்கள் யார்பரதவர்

Ø  நெய்தல் திணையின் கடவுள் யார்வருணன்

Ø  வறண்ட நிலம் எவ்வாறு அழைக்கப்படும் - பாலை திணை

Ø  பாலைத் திணையின் தொழில் என்னவீரச்செயல்கள்

Ø  பாலைத் திணையின் மக்கள் யார் - மறவர் மறத்தியர்

Ø  பாலைத் திணையின் கடவுள் யார்கொற்றவை

Ø  சங்க காலத்தில் எத்தனை பெண் புலவர்கள் வாழ்ந்து அரிய நூல்களைக் கொடுத்து சென்றுள்ளனர் - 40 பெண்புலவர்கள்

Ø  சங்ககால பெண்பாற் புலவர்கள் யார் - அவ்வையார்,வெள்ளிவீதியார், காக்கைபாடினியார்,ஆதிமந்தியார்,பொன்முடியார்.

Ø  சங்ககால மக்களின் முதன்மை கடவுள் யார் - சேயோன் அல்லது முருகன்

Ø  சங்ககாலத்தில் வழிபடப்பட்ட ஏனைய கடவுளர்கள் யார் - சிவன்,மாயோன்(விஷ்ணு), இந்திரன், வருணன்,கொற்றவை

Ø  போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடப்படும் கல் எவ்வாறு அழைக்கப்பட்டது - வீரக்கல் அல்லது நடுகல்

Ø  சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பாம்பின் தோலை காட்டிலும் மென்மையான துணி எவ்வாறு அழைக்கப்படுகிறது - கலிங்கம்

Ø   எந்த அரசன் இசையின் ஏழு சுரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றிருந்தான் (ஏழிசை வல்லான்) என அறியப்படுகிறார் - கரிகாலன்

Ø  பாடல்கள் பாடும் புலவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் - பாணர்,விறலியர்

Ø  சங்ககாலத்தில் முக்கியமான நகரங்களில் எத்தனை வகையான சந்தைகள் இருந்தன - இரண்டு: காலை நேர சந்தையான நாளங்காடி, மாலை நேர சந்தையான அல்லங்காடி

Ø  எகிப்து அரசன் இரண்டாம்ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்டபோது தொல்லியல் அறிஞர்கள் அவருடைய நாசியின் உள்ளும் அடிவயிற்றிலும் எது அடைக்கப்பட்டிருந்தை கண்டனர் - கருமிளகுக்கதிர்

Ø  எந்த ரோமப் பேரரசர் இந்திய வணிகர்களால் ஏற்றுமதி செய்யப்பட்ட பட்டு எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என அறிவித்தார் - ஆரிலியன்

Ø  மூத்த பிளினி எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ரோம்நாடு

Ø  முசிறியை " இந்தியாவின் முதல் பேரங்காடி" என குறிப்பிட்டுள்ளவர் யார் - இயற்கை வரலாறு எனும் நூலில் மூத்த பிளினி

Ø  ரோமானியரின் குடியிருப்பு இருந்த முசிறியில் எந்த கடவுளுக்காக கோவில் கட்டப்பட்டுள்ளது - அகஸ்டஸ்

Ø  பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தமானது அலெக்சாண்ட்ரியாவினைச் சேர்ந்தவணிகர் ஒருவருக்கு முசிறியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது இது எந்த காலத்தைச் சார்ந்தது - கிமு இரண்டாம் நூற்றாண்டு