10TH- STD - தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

10TH- STD - தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்



1.     மூலப் பொருட்களை எளிதில் பயன்படுபொருட்களாக மாறும் இடம் – தொழிற்சாலை.

2.     நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களும் தேவைப்படும் பொருட்களை நவீன தொழில்நுட்பங்களை                            பயன்படுத்தி பெருமளவில் உற்பத்தி செய்வதுதொழில்மயமாதல்.

3.     தொழில்மயமாதலின் முக்கிய நோக்கம் -வேலைவாய்ப்பை உருவாக்குவது.

4.     வெளியீடுகளை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது - நுகர்வோர் பண்டங்கள் துறை.

5.     வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளர்கள் பயன்படுத்தப்பட்டால் அது - மூலதன பண்டங்கள் துறை.

6.     சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற பிற தொழில்களுக்கு மூலப் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள்           உள்ளனஇத்தகைய தொழில்கள் - அடிப்படை பண்டங்கள் தொழில்கள்.

7.     1920 களில் தொழில் தொகுப்பு அல்லது மாவட்டங்களின் நன்மைகளை முதன்முதலில் கண்டறிந்தவர் - ஆல்பிரட் மார்ஷல்.

8.     எந்த ஆண்டு இத்தாலியில் சிறிய நிறுவனங்கள் வெற்றி பெற்ற பின்னர்தான் ஆல்பிரட் மார்ஷல் தொழில்துறை                 மாவட்டம் கருத்து பிரபலமாகபட்டது -1980.

9.     சேலத்தில் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்ட ஆண்டு -1973.

10.   1970 மற்றும் 1980 களில்:

                       1.     விசைத்தறி நெசவு தொழில் தொகுப்புகள்- கோயம்புத்தூர்

                       2.     பின்னலாடை தொழில் தொகுப்புகள்-திருப்பூர்.

                       3.     வீட்டு அலங்கார தொழில் தொகுப்புகள்- கரூர் .

11.   13 மாவட்டங்களில் எத்தனை தொழில் தொகுப்புக்கள் உள்ளன- 27.

12.   ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம் – சென்னை.

13.   தமிழ்நாட்டில் முக்கிய தொழில்துறை தொகுப்புக்கள் ற்றும் சிறப்புகள்:

                       1.     திருவள்ளூர் – தானியங்கி.

                       2.     சென்னை - தானியங்கிமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்.

                       3.     வேலூர் – தோல்.

                       4.     காஞ்சிபுரம் - பட்டு ஆடைகள்.

                       5.     ஓசூர் - தானியங்கி மற்றும் மின்னணு.

                       6.     சேலம் - இரும்பு மற்றும் விசைத்தறி.

                       7.     ஈரோடு - விசைத்தறி மற்றும் மஞ்சள்.

                       8.     நாமக்கல் -போக்குவரத்து மற்றும் கோழிப்பண்ணை.

                       9.     அரியலூர் – சிமெண்ட்.

                      10.   திருப்பூர் - பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள்.

                      11.   திருச்சி - கொதிகலன்கள் மற்றும் விசையாழிகள்.

                      12.   கரூர் - வாகன கட்டுமானம்விசைத்தறிகள்.

                      13.   கோயம்புத்தூர் - ஆயத்த ஆடைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பம்.

                      14.   மதுரை – தோல்.

                      15.   சிவகாசி - பட்டாசுகள்தீப்பெட்டிகள்அச்சிடுதல்.

14.   தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது – கோயம்புத்தூர்.

15.   ஈரோடுசேலம் - பகுதிகளில் அதிக அளவிலான மின்துறை அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறி தொழில் மிகவும் பரவலாக உள்ளது.

16.   நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில்  80% சதவீதம் பங்கினை கொண்டுள்ள பகுதி – திருப்பூர்.

17.   தரை விரிப்புகளை உற்பத்தி செய்யும் முக்கிய மையங்களாக உள்ளவை - பவானிகுமாரபாளையம்.

18.   இந்தியாவின் 60% தோல் பதனிடும் உற்பத்திதிறன் ,38%தோல் காலணிகள் மற்றும் தோல் உதிரிபாகங்கள்           உற்பத்தித்திறனை பெற்றுள்ள மாநிலம் – தமிழ்நாடு.

19.   நூற்றுக்கணக்கான தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதிகளைக் கொண்டுள்ளது நகரங்கள்-  வேலூர் அதனை      சுற்றியுள்ள ராணிப்பேட்டைஆம்பூர் வாணியம்பாடி.

20.   தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக உள்ளது – வேலூர்.

21.   இந்தியா 90% பட்டாசு உற்பத்தி,80% பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தி ,  60% அச்சுப்பணிகளுக்கு  எந்த                பகுதியை சார்ந்துள்ளது – சிவகாசி.

22.   தகவல் தொழில்நுட்ப பொருளாதார சிறப்பு மண்டலங்கள் உள்ள இடங்கள் :ELCOTநிறுவனம் எத்தனை               இடங்களில் நிறுவியுள்ளது8.இடங்கள்.

                 1.     சென்னை - சோழிங்கநல்லூர்

                 2.     கோயம்புத்தூர்-விளாங்குறிச்சி

                 3.     மதுரை - இலந்தை குளம்

                 4.     மதுரை - வடபாலஞ்சிகிண்ணிமங்கலம்

                 5.     திருச்சி - நவல்பட்டு

                 6.     திருநெல்வேலி - கங்கைகொண்டான்

                 7.     சேலம்ஜாகிர் அம்மாபாளையம்

                 8.     ஓசூர் – விஸ்வநாதபுரம்

23.   தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்ற கழகம்  SIPCOT நிறுவப்பட்ட ஆண்டு - 1971.

24.   SIPCOT - State industrial promotion corporation of tamilnadu.

25.   தமிழ்நாடு மாநில சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் TANSIDCO நிறுவப்பட்ட ஆண்டு - 1970.

26.   TANSIDCO - Tamilnadu small industries development corporation.

27.   தமிழ்நாடு தொழில் துறை மோம்பாட்டு கழகம் TIDCO நிறுவப்பட்ட ஆண்டு - 1965.

28.   TIDCO - Tamilnadu industrial development corporation.

29.   தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் வரையறுக்கப்பட்ட ஆண்டு - 1949.

30.   TIIC - TamilNadu Industrial Investment Corporation Ltd.

31.   சிறப்பு பொருளாதார மண்டல (SEZS special economic zones)கொள்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – ஏப்ரல் - 2000.

32.   ஏற்றுமதி செயலாக்க மண்டலங்கள் :

·         நாங்குநேரி SEZ - பல்நோக்கு உற்பத்தி SEZ, திருநெல்வேலி.

·         எண்ணூர் SEZ -அனல் மின் திட்டம்வயலூர்.

·         கோயம்புத்தூர் SEZ -தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்.

·         ஓசூர் SEZ - தானியங்கி பொறியியல்மின்னணுவியல் ,விண்வெளி , பாதுகாப்பு.

·         பெரம்பலூர் SEZ - பல்நோக்கு உற்பத்தி SEZ.

·         இந்தியா - சிங்கப்பூர் SEZ- IT/ITESமின்னணு வான்பொருள்தளவாடங்கள் மற்றும் கிடங்குகள் -      திருவள்ளூர் மாவட்டங்கள்.

·         உயிரி - மருந்துகள் SEZ - மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு.

33.  MEPZ - Madras Expor Processing Zone மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம்.

34.   மத்திய அரசு அமைத்த நாட்டின் 7 ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் ஒன்று - மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம்.

35.   மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் நிறுவப்பட்ட ஆண்டு – 1984.

36.   மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் தலைமையகம் - சென்னை – தாம்பரம்.

37.   தமிழ்நாடு சிறுதொழில் கழகம் TANSI வரையறுக்கப்பட்ட ஆண்டு -1965.

38.   TANSI – Tamil Nadu small industries corporation LTD .

39.   ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு - ஜனவரி 16, 2016.

40.   ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் முதன்மையான நோக்கம் – தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல்வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல்.

41.   ஸ்டாண்ட்அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு - ஏப்ரல் 5, 2016.

42.   ஸ்டாண்ட்அப் இந்தியா திட்டம் - பட்டியல் சாதியினர் (SC) அல்லது பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் ஒரு வங்கிக்கிளைக்கு ஒரு பெண் கடன் பெறுபவர் என கடன் வழங்கி எளிதாக்குவதே இத்திட்டமாகும்.

43.   புதிய சிந்தனைகளுக்கும் , செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர்தொழில் முனைவோர் .

44.   தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே -தொழில் முனைவு.

45.   தமிழ்நாட்டின் நுழைவாயில் – தூத்துக்குடி.

46.   ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியுடன் சென்னை ல் தோல்பொருள் ஏற்றுமதிக்கான மையம் உள்ளது.

47.   தமிழ்நாடு தொழில் துறை வளர்ச்சி முகமை:

           1.     SIPCOT

           2.     TANSIDCO

           3.     TIDCO

48.   லிட்டில் ஜப்பான் என்று பற்றுடன் அழைக்கப்படுவது – சிவகாசி.

 

 

Post a Comment

0 Comments