மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்

 

வளங்கள்

·         மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும்.

·         பணமதிப்புள்ள வளங்கள் - பெட்ரோலியம்

·         பணமதிப்பற்ற வளங்கள்- காற்று

·         ஒரு பொருளை வளமாக மாற்றுவதற்கான காரணிகள் காலமும் தொழில் நுட்பமும் ஆகும்

·         வளங்கள் மூன்று வகைப்படும்.

·         இயற்கை வளங்கள் (முதல்நிலை செயல்பாடு)

Ø  .கா: காற்று, நீர், மண், கனிமங்கள், இயற்கைத் தாவரங்கள், விலங்குகள்,

நுண்ணுயிரிகள், வேட்டையாடுதல் , காடுகள்

·         உயிரியல் வளங்கள் -  தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள்

·         உயிரற்ற வளங்கள் -  நிலம், நீர், காற்று மற்றும் கனிமங்கள்.

·         கண்டறியப்பட்ட வளங்கள் - நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கம்

·  மறைந்திருக்கும் வளங்கள்- வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் காணப்படும் கடல் ஈஸ்ட்

·         கடல் ஈஸ்ட்டானது  நிலப்பரப்பிலுள்ள ஈஸ்டைவிட மிகுந்த ஆற்றல் உடையது. இச்சத்தை ரொட்டி தயாரித்தல், மது வடித்தல், திராட்சை ரசம் தயாரித்தல், உயிரி எத்தினால் தயாரித்தல் மற்றும் மருத்துவப்புரதம் தயாரித்தலுக்குப் பயன்படுகிறது.

·         புதுப்பிக்கக்கூடிய வளங்கள் - காற்று, நீர், சூரிய ஒளி

·         புதுப்பிக்க இயலா வளங்கள் - நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு மற்றும் கனிமங்கள்

·         உள்ளூர் வளங்கள் - கனிமங்கள்.

·         உலகளாவிய வளங்கள் - சூரிய ஒளி மற்றும் காற்று.

·         தனிநபர் வளங்கள் - அடுக்குமாடிக் கட்டடங்கள்.

·         சமூக வளங்கள் - பூங்கா.

·         நாட்டு வளங்கள்இந்தியாவின் வெப்பமண்டல மழைக்காடுகள்.

வெப்ப மண்டலமழைக்காடுகள்உலகின் பெரும் மருந்தகம்”(world’s largest pharmacy) என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் தாவரங்களில் 25% தாவரங்கள் மருத்துவ குணம் கொண்ட தாவரங்களாகும். (.கா) சின்கோனா.

·         பன்னாட்டு வளங்கள் - திமிங்கலப் புனுகு

ஸ்பெர்ம் திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் ஒரு வகை திடப்பொருளே திமிங்கலப்புனுகு ஆகும். ஒரு பவுண்டு (0.454 கி.கி) திமிங்கலப் புனுகின் விலை 63,000 அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும். இது வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

·         மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் (இரண்டாம் நிலை செயல்பாடுகள்) - சர்க்கரை ஆலை, பாலங்கள், வீடுகள், சாலைகள்.

·         மனித வளம் - மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

·         மூன்றாம் நிலை செயல்பாடுகள் -வங்கி, வணிகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை

·         வளங்கள் மனிதனின் பேராசைக்கு

அன்று, அவனது தேவைக்கு மட்டுமேமகாத்மா காந்தி கூறுகிறார்.

·         வளத்திட்டமிடுதல்- வளங்களை சரியாக பயன்படுத்துவது.

·         வளங்களைப் பாதுகாத்தல்- வளத்தினைக் கவனமாகக் கையாளுதல்

· நிலையான வளர்ச்சி- வருங்காலத்தலைமுறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைத்தல்.

·         வளங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் மூன்று வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் (3RS). அவைகள், குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse), மறுசுழற்சி செய்தல் (Recycle)

Post a Comment

0 Comments